உன்றன்‌ சுயமதியே நெறி

உன்றன்‌ சுயமதியே நெறி என்‌-று
உகந்து சாயாதே;-அதில்‌ நீ
மகிழ்ந்து மாயாதே.

சரணங்கள்‌

1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்‌
வழுத்தும்‌' மதித னைக்‌ கேளாய்‌:-தீங்‌
கொழித்‌ திதமாய்‌ மனந்‌ தாழாய்‌”, அருள்‌ சூழாய்‌. - உன்றன்‌

2. சொந்தம்‌ உனதுளம்‌ என்று நீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு;-அதின்‌
தந்திரப்‌ போக்கை விட்டோடு; கதி தேடு. - உன்றன்‌

3, துட்டர்‌ தம்‌ ஆலோசனைப்படியே தொடர்ந்‌
திட்ட மதாய்‌ நடவாதே;-தீயர்‌
கெட்ட வழியில்‌ நில்லாதே; அது தீதே. - உன்றன்‌

4. சக்கந்தக்‌” காரர்‌ இருக்கும்‌ இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே;-அவர்‌
ஐக்யம்‌ நலம்‌ என்றெண்ணாதே; அ தொண்ணாதே'. - உன்றன்‌

5. நான்‌ எனும்‌ எண்ண மதால்‌ பிறரை அவ
மானிப்பது வெகு பாவம்‌;-அதின்‌
மேல்‌ நிற்குமே தேவ கோபம்‌; மனஸ்தாபம்‌. - உன்றன்‌

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps