யூதேயாவின் ஞான சாஸ்திரி

யூதேயாவின்‌ ஞான சாஸ்திரி
விந்தைக்‌ காட்சியைக்‌ கண்டான்‌;
கோடாகோடி தூதர்‌ கூடி
பாடும்‌ கீதத்தைக்‌ கேட்டான்‌;

2 உந்தன்‌ மாட்சி சேனைக்‌ கர்த்தா,
வானம்‌ பூமி நிரப்பும்‌;
தூய தூய தூய கர்த்தா
உந்தன்‌ துதி பெருகும்‌

3 என்றே ஆசனத்தைச்‌ சூழ்ந்து
கேரூப்‌ சேராபீன்களும்‌;
ஆலயம்‌ நிரம்ப நின்று
மாறி மாறிப்‌ பாடவும்‌.

4 தூயர்‌ தூயர்‌ தூயராண
சேனைக்‌ கர்த்தர்‌ எனவும்‌,
தூதர்‌ பாட்டு விண்ணில்‌ ஒங்க
மண்ணில்‌ இன்றும்‌ ஒலிக்கும்‌

5 உந்தன்‌ மாட்சி சேனைக்‌ கர்த்தா,
வானம்‌ பூமி நிரப்பும்‌;
தூய, தூய, தூய கர்த்தா
உந்தன்‌ துதி பெருகும்‌;

6 என்றே, வான சேனையோடு
பூதலத்தின்‌ சபையும்‌
கர்த்தாவை நமஸ்கரித்து
துதி கீதம்‌ பாடிடும்‌.

Start Downloading Your Apps