தேவா எனைமறக்காதே இந்தச்‌

தேவா எனைமறக்காதே,-இந்தச்‌
சிறியன்‌ படுந்துயரில்‌ தூரநிற்காதே.

நேயா உனையன்றி நீசனுக்கார்‌ கதி?
தூயா கிருபைகூர்‌, நான்‌ மகாதோஷி. - தேவா

சரணங்கள்‌

1. வானுலகோர்தொழும்‌ நாதா!-இந்த
மானிடர்கரையேற வந்தசகாயா!
காலைமாலைகள்தோறும்‌ கரைந்து உருகுகின்ற
கர்மசண்டாளனைக்‌ கண்ணோக்க லாகாதா? - தேவா

2. பாவியின்‌ மேலிரங்கையா!-பொல்லாப்‌
பாதகனைக்கைவிடாதே நலமெய்யா!
தாரணிதன்னில்‌ தவிக்குமிவ்வேழையைத்‌
தாங்கியாதரித்துந்தன்‌ தயைபுரி ஐயா! - தேவா

3. என்மீறுதல்‌ நினையாதே, எந்தன்‌
இளமையின்‌ பாவத்தை மனதில்வையாதே.
உன்பாதஞ்சேர்ந்தேன்‌, உவந்தேனுனையடைந்தேன்‌,
நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன்‌. - தேவா

4. நெருக்கப்படுகிறேன்‌ தேவா,-என்னை
உருக்கமாய்ப்‌ பாராய்‌, கிறிஸ்தேசுநாதா!
இரக்கம்‌ வைத்தென்றனின்‌ குறைதனை நீக்கு,
என்னை ஆட்கொண்டவா, இயேசு சர்வேசா! - தேவா

5. சரணம்‌, சரணம்‌ சருவேசா-இந்தத்‌
தருணம்‌, தருணம்‌ உன்றன்‌ கருணை கூர்‌ நேசா!
மரணவேளையிலும்‌ நடுத்தீர்வை' தினத்திலும்‌
மாபாதகன்‌ எனை ரட்சியாய்‌ நாதா! - தேவா

- அருள்திரு. ஆ. தேவதாசன்‌

Start Downloading Your Apps