இவ்வந்தி நேரத்தில் எங்கே

இவ்வந்தி நேரத்தில்‌ எங்கே
போய்த்‌ தங்குவீர்‌ என்‌ இயேசுவே
என்‌ நெஞ்சில்‌ நீர்‌ பிரவேசிக்கும்‌
மா பாக்கியத்தை அருளும்‌.

2. ஆ, நேசரேநீர்‌ அடியேன்‌
விண்ணப்பத்துக்கிணங்குமேன்‌;
என்‌ நெஞ்சின்வாஞ்சை தேவரீர்‌
ஒருவரே என்றறிவீர்‌.

3. பொழுது சாய்ந்துபோயிற்று
இரா நெருங்கி வந்தது;
மெய்ப்‌ பொழுதே, இராவிலும்‌
இவ்வேழையை விடாதேயும்‌.

4. ஆ, என்னைப்‌ பாவ ராத்திரி
பிடித்துக்‌ கெடுக்காதினி;
நீர்‌ ஒளி வீசியருளும்‌,
ரட்சிப்பின்‌ பாதை காண்பியும்‌.

5. நீர்‌ என்‌ கடை இக்கட்டிலும்‌
என்னோடிருந்து ரட்சியும்‌;
உம்மைப்‌ பிடித்துப்‌ பற்றினேன்‌,
நீர்போய்விடீர்‌ என்றறிவேன்‌.

Start Downloading Your Apps