ஐயா உனதருள்‌ புரி அருமை

ஐயா, உனதருள்‌ புரி, அருமை மேசையா!

பொய்யா மருள்வினை, செய்யா துலகதில்‌
நையா தடிமைகொள்‌, துய்யா, மெய்யா. - ஐயா

சரணங்கள்‌

1. ஆதா ரமும்‌ நீ யலதார்‌ திருப்‌ பாதா,
சாதா ரண வேத வினோத சங்கீதா,
காதா ர வினவு, நீ தா எனின்‌ குறை,
தாதா, பர குரு நாதா, போதா! - ஐயா

2, அந்தாதி, அனாதி, பிதா ஒரு மைந்தா;
சிந்தா குலமே தவிர்‌, நீடு சுகந்தா;
உந்தா பரம்‌ அருள்‌ எந்தா,” ஞானப்ர
பந்தா,? வருசதா னந்தா நந்தா! - ஐயா

3. ஈசா, நசராபுரி மேவிய வாசா,
பூசா” விதி மாமறை புகழுபதேசா,
மாசா” மிகு பவ நாசா, எருசலை
ராசா, ஒரு ச௬ வேசா, நேசா. - ஐயா

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps