தேவசுதனுயிர்த்தார்‌ மிருதினின்று

தேவசுதனுயிர்த்தார்‌-மிருதினின்று

பாவ, லோக, ரோக, மேக, மேக, மேசியாபரிதி. - தேவ

சரணங்கள்‌

1. நலவடு வைந்துமிலங்க,
திருச்சிலுவை பதாகை துலங்க,
பொல்லா எமனுடமன மிலங்க. - தேவ

2. மனுடர்‌ குலங்கள்‌ துலங்க,
பிதாவினுட கிருபை இலங்க,
துஷ்ட அலகை மனங்கலங்க - தேவ

3, பரபலியாய்‌, நரபலியாய்‌, திருபலியாய்‌, ஒரு பலியாய்ப்‌
பரமும்‌, வரமும்‌, திறமும்‌, மருவும்‌
படிஉயிர்‌ விடுபரன்‌ நரர்நிதி கதியென - தேவ

4. கிறிஸ்தவரே, தரித்திரரே, கிருபையிலே பெருகுவீரே,
கெடிசெய்‌ கொடியன்‌ கடியுமிடியும்‌
கெடவும்‌ படவுமிதோ, அடியுமுடியுமில்லா - தேவ

- பா. மிகாவேல்‌

Start Downloading Your Apps