என்னையும்‌ உம தாட்டின்‌

என்னையும்‌ உம தாட்டின்‌ மந்தையோ
டேற்றுக்‌ காத்திடும்‌, யேசுவே.

சரணங்கள்‌

1. வன்னியான! தோர்‌ அலகைப்‌ பேய்‌ தனை
வதைத்திட ஞானப்‌ பெலத்துடன்‌ சிறந்‌-து
இந்நிலத்தினில்‌ வந்துதித்த நல்‌
ஏசுவே, எனைச்‌ சேர்த்திடும்‌. - என்னையும்‌

2. ஐயிருபது ஆட்டினில்‌ ஒன்று
அகன்றிட, மனம்‌ உகந்து கோன்‌,-அதை
மெய்யதாகவே தேடுவான்‌ என்ற
மேய்ப்பரே, எனைச்‌ சேர்ந்திடும்‌. - என்னையும்‌

3. வாசலாகவே இருக்கிறேன்‌, எனால்‌
வந்தவன்‌ மனம்‌ நொந்திடான்‌,-வெகு
நேசமாகவே வாழ்வான்‌, என்ற நல்‌
நிமலனே, எனைச்‌ சேர்ந்திடும்‌. - என்னையும்‌

4. நல்ல மேய்ப்பன்‌ நான்‌ என மொழிந்த என்‌
நாதனே, ஞான போதனே,-ஜீவ
புல்லுள்ள ஸ்தலந்‌ தன்னில்‌ கொண்டெனைப்‌
போஷித்து முசிப்பாற்றிடும்‌. - என்னையும்‌

5. மேய்ப்பராகவே இருக்கிறீர்‌, எந்தம்‌
மேய்ச்சலும்‌ நீர்‌ தாமலோ,-ஞான
வாய்ப்புள்ள சத்ய மறையில்‌ மேய்ந்து நான்‌
வளர்ந்திட அருள்‌ புரிந்திடும்‌. - என்னையும்‌

- மரியான்‌ உபாத்தியாயர்‌

Start Downloading Your Apps