சீரேசு பாலன்‌ ஜெயமனு வேலன்‌

சீரேசு பாலன்‌ ஜெயமனு வேலன்‌
சீர்‌ நாமத்தைத்‌ தினமே போற்றுவோமே

பாராளும்‌ வேந்தன்‌ பகரொண்ணா மைந்தன்‌,
தாராள மாகத்‌ தாமே மனுவான.- சீரேசு

சரணங்கள்‌

1. எண்ணரும்‌ பெருமான்‌ ஏழைச்‌ சாயலாக
மண்ணி லேகின மாட்சிமை யாலே,
விண்ணவர்கள்‌ போற்ற, வெற்றிக்கவி சாற்ற
வண்ணம்‌ பாடி நாம்‌ மகிழ்ந்திட வேண்டாமோ? -சீரேசு

2. உன்னத பரனுக்‌ கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில்‌ எழில்சமா தானம்‌,
மன்னுயிர்கள்‌ மீது மாபிரியம்‌ ஓங்க
தன்னுயிர்‌ தந்த தயவை என்ன சொல்வோம்‌? - சீரேசு

3. பாவப்‌ பிணியாலே பாதகரைப்‌ போலே
சாபத்தை நம்மேல்‌ நாம்‌ தேடினோமே,
கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய்‌ வந்த தேவமைந்தனான - சீரேசு

4. நித்தனே, என்‌ பாவம்‌ எத்தனையானாலும்‌
சித்தம்‌ உருகிச்‌ சீர்கூற வேணும்‌,
அத்தனே, உன்‌ பாதம்‌ அண்டினேன்‌ இப்போதும்‌;
பத்தியாய்‌ உனைப்‌ பகருவேன்‌ எப்போதும்‌ - சீரேசு

- அருள்திரு. சா. பரமானந்தம்‌

Start Downloading Your Apps