நெஞ்சமே தள்ளாடி நொந்து

நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
நீ கலங்காதே;-கிறிஸ்‌
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே.

சரணங்கள்‌

1. தஞ்சமான தோழர்களும்‌ வஞ்சகமாக-உன்னை
தாக்கியே பகைஞராக நின்றபோதிலும்‌. - நெஞ்சமே

2. அன்னை தந்தை ஆனவரும்‌ பின்ன பேதமாய்‌-உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன்‌ ஆன போதிலும்‌. - நெஞ்சமே

3. ஜீவனம்‌ இழந்து துன்பம்‌ மேவினாலும்‌,-மா
சிறுமையாய்ச்‌ சகிக்கொணா வறுமை கொண்டாலும்‌.
- நெஞ்சமே

4. பஞ்சமும்‌ பசியும்‌ வந்து கெஞ்ச வைத்தாலும்‌,-மிகு
பாரமாய்ச்‌ சுமை உன்‌ மேலே பற்றி நின்றாலும்‌. - நெஞ்சமே

5. கெட்ட நோயிலும்‌ நீ அகப்‌ பட்டுழன்றாலும்‌,-எந்தக்‌
கேடுகள்‌ உன்மேலே வந்து மூடினாலும்‌. - நெஞ்சமே

6. ஆன வீடு தானும்‌ கொள்ளை ஆன போதிலும்‌,-கிறிஸ்‌
தண்ணலே, உனக்‌ கெல்லாம்‌ என்‌ றெண்ணி நிறைவாய்‌
- நெஞ்சமே

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps