எப்போ காண்பேனோ எப்போ

எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?
எது என்‌ சீயானோ? அதின்னம்‌ எத்தனை தொலையோ?

சரணங்கள்‌

1. என்‌ யேசுநாதர்‌,-என்‌ ஆத்தும மீட்பர்‌,
என்‌ ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை, - எப்‌

2. தூதர்கள்‌ கூடிச்‌-சோபனம்‌ பாடி,
நாதன்‌ கிறிஸ்துவைப்‌ போற்றும்‌ பரமநல்‌ வாழ்வை. - எப்‌

3, ஜீவ கிரீடம்‌,-திவ்விய வாழ்வு,
பாவி எனக்குப்‌ பரிசுத்தவான்களின்‌ பங்குண்டாமே. - எப்‌

4. துன்பங்கள்‌ மாறும்‌,-சுகம்‌ வந்து சேரும்‌;
இன்பக்‌ கிறிஸ்துவினிடத்தில்‌ சேர்ந்தால்‌ என்‌ மனம்‌ ஆறும்‌.- எப்‌

5. உலகத்தின்‌ கவலை-ஒன்றும்‌ செய்யாதே;
பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம்‌ கொள்வேன்‌.- எப்‌

6. கைகளில்‌ எடுத்தேன்‌-கண்ணீரைத்‌ துடைப்பார்‌;
ஐயன்‌ கிறிஸ்துமேல்‌ கவிபாடி நான்‌ ஆனந்தம்‌ கொள்வேன்‌.- எப்‌

- அருள்திரு. பாக்கியநாதன்‌ தாவீது

Start Downloading Your Apps