சத்தம் கேட்டு சித்தம் செய்யசத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே - இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
சரணங்கள்
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது (ஆ ஆ)
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (2)
1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ
அதை கடை பிடித்தாக வேண்டுமேகீழ்ப்படிந்தவர்கள்
அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும்- சத்தம்
2. தேவை அதிகம் ஏராளம் ஆ
ஏராளம் ஏராளமே குஜராத் பீகார்
யூபியில் ஏராளம் ஏராளமே
இராஜஸ்தான், எம்பி, ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார் - சத்தம்
3. உலக மாமிசப் பிடியினின்றும் ஆ
பிசாசின் தந்திர வலையினுன்றும்
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம்
சாத்தானை முறியடிப்போம்
உப்பைப் போல கரைந்து விடு
மெழுகைப் போல உருகி விடு - சத்தம்
4. வெற்றியே தரும் ஆண்டவருக்கு ஆ
காணிக்கை காணிக்கையே
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே
காணிக்கை காணிக்கையே
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும் - சத்தம்