பெத்தலெகேம் ஊரோரம்

பெத்லேகம்‌ ஊரோரம்‌ சத்திரத்தை நாடிக்‌
கர்த்தன்‌ ஏசு பாலனுக்குத்‌ துத்தியங்கள்‌ பாடிப்‌
பக்தியுடன்‌ இத்தினம்‌ வாடிப்‌ - பெத்‌

2. காலம்‌ நிறைவேறின போதிஸ்திரியின்‌ வித்து
சீலகன்னி கர்ப்பத்தில்‌ ஆவியால்‌ உற்பவித்துப்‌
பாலனான யேசுநமின்‌ சொத்து - பெத்‌

3. எல்லையில்லா ஞானபரன்‌ வெல்லைமலையோரம்‌
புல்லனையிலே பிறந்தார்‌ இல்லமெங்கு ஈரம்‌
தொல்லைமிகும்‌ அவ்விருட்டு நேரம்‌ - பெத்‌

4. வான்‌ புவி வாழ்‌ ராஜனுக்கு மாட்டகந்தான்‌ வீடோ,
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்‌ பூடோ
ஆன பழங்‌ கந்தை என்ன பாடோ? - பெத்‌

5. அந்தரத்தில்‌ பாடுகின்றார்‌ தூதர்‌ சேனை கூடி
மந்தை ஆயர்‌ ஓடுகின்றார்‌ பாடல்‌ கேட்கத்‌ தேடி
இன்றிரவில்‌ என்ன இந்த மோடி - பெத்‌

6. ஆட்டிடையர்‌ அஞ்சுகிறார்‌ அவர்‌ மகிமை கண்டு,
அட்டியின்றிக்‌ காபிரியேல்‌ சொன்ன செய்தி கொண்டு,
நாட்டமுடன்‌ ரட்சகரைக்‌ கண்டு - பெத்‌

7. இந்திரியுடு கண்டரசர்‌ மூவர்‌ நடந்தாரே,
சந்திரந்‌ தூபம்‌ போளம்‌ வைத்துச்‌ சுதனைப்‌ பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம்‌ வா நேரே - பெத்‌

Start Downloading Your Apps