தோத்திர பாத்திரனே தேவா

தோத்திர பாத்திரனே, தேவா,
தோத்திரந்‌ துதியுமக்கே!
நேத்திரம்‌ போல்‌ முழு ராத்ரியுங்காத்தோய்‌;
நித்தியம்‌ துதியுமக்கே!

சரணங்கள்‌

1. சத்துரு பயங்களின்றி,-நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங்‌ கோட்டையானாய்‌. - தோத்திர

2. விடிந்திருள்‌ ஏகும்வரை-கண்ணின்‌
விழிகளை மூடாமல்‌,
துடி கொள்‌ தாய்போல்‌ படிமிசை எமது
துணை எனக்‌ காத்தவனே. - தோத்திர

3. காரிருள்‌ அகன்றிடவே,-நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே,
பாரிதைப்‌ புரட்டி உருளச்செய்‌ தேகன
பாங்கு சீராக்கி வைத்தாய்‌. - தோத்திர

4. இன்றைத்‌ தினமிதிலும்‌-தொழில்‌
எந்தெந்த வகைகளிலும்‌
உன்‌ திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்‌
ஊன்றியே காத்துக்கொள்வாய்‌. - தோத்திர

- பா. யோவான்‌

Start Downloading Your Apps