விலைமதியா ரத்தத்தாலே

விலைமதியா ரத்தத்தாலே
மீட்கப்பட்டீரே.

சரணங்கள்‌

1. உலையும்‌ பொன்‌ வெள்ளி
உலோகத்தாலல்ல,-ரீ-ரி-ரீ-ரீ
சிலுவையி லேசுபரன்‌-வலத்‌
திருவிலாவில்‌ வடியும்‌. - விலை

2. நீருமக்‌ குரிமை
சினைப்பதுமலையே,-ரீ-ரீ-ரீ-ரீ
சீர்மண மகனுடைமை,-நீவிர்‌
சிந்திப்பது கடமை. - விலை

3. ஆகங்கள்‌' அவர்க்கு
ஆலய மலவோ?-ரி-ரீ-ரி-ரி
மோகஇச்சைக எணுகாதிருத்தல்‌
முக்கியமென்றறியீர்‌. - விலை

4. ஆவியுந்‌ தேவன்‌
அகமதுதானே;-ரீ-ரி-ரி-ரீ
தேவதுதிக ளதிலே-எழச்‌
செய்வீர்‌ தினமு மிகவே. -விலை

5. மனமது அவர்க்கு
மாத்திரம்‌ சொந்தம்‌, -ரீ-ரீ-ரீ-ர்‌
பிளமுறு கேடறிவு-அதைப்‌
பின்‌ தொடர்வது இழிவு. - விலை

- அருள்திரு. வே. மாசிலாமணி

Start Downloading Your Apps