இயேசு என்தன் சங்கீதமானவர்

இயேசு என்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமானவர்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்- இயேசு

1துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே- இயேசு

2இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழ்த்திடுவோம்- இயேசு

3வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்துவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்- இயேசு

Start Downloading Your Apps