என்னோ பல நினைவாலும்‌

என்னோ பல நினைவாலும்‌ நீ உன்னை அலைக்கழிப்பாய்‌.

மன்னர்கள்‌ மன்னவன்‌ ஆகிய யேசு உன்‌
மன்னவராய்‌ இருக்கையிலே. - என்‌

சரணங்கள்‌

1. அன்னை யிடத்துருவாய்‌, உன்னை அமைத்த தந்தை
அல்லவோ?-பின்னும்‌,
ஆகாரமும்‌ உடையும்‌ ஜீவனும்‌ அளிப்பதவர்‌ அல்லவோ? -என்‌

2. மாதானவள்‌! சேயை” ஒரு வேளை மறந்தாலும்‌,-உன்னை
மறவோம்‌ ஒருகாலும்‌, என வார்த்தை கொடுத்தாரே - என்‌

3. இஸரேலரைக்‌ காப்போர்‌ உறங்கிடுவோர்‌ என நினையேல்‌;-
அவர்‌
நிசமாக உன்‌ வலப்பாகத்தில்‌ நிழல்‌ ஆவர்‌ என்றறிவாய்‌. - என்‌

4. சிங்கங்கள்‌ பட்டினியாய்‌ இருக்கக்‌ கண்டேன்‌ தேசம்‌ எங்கும்‌
சுற்றிப்‌ பார்த்தும்‌,-தேவ
சேயர்கள்‌ பட்டினியாகக்‌ காணேன்‌, என்ற திவ்ய உரையும்‌
பொய்‌ யாமோ? - என்‌

5. தேகமும்‌ கெட்ட உலகமும்‌ பேயும்‌ திரண்டு உனைப்‌
பொருதாலும்‌ - அதை
ஜெயித்தயேசு உன்‌ மன்னவ ராகையில்‌ சிந்தனை வேறென்ன
உனக்கு? - என்‌

6. தேவ பிதா நின்‌ பிதாவும்‌ இயேசு நின்‌ சிநேகிதரும்‌ சுத்த ஆவி
-உன்றன்‌
தேற்றர வாளனும்‌ ஆவதைப்‌ பார்க்கிலும்‌, தேவை நினக்‌
கொன்‌ றும்‌ இல்லையே. - என்‌

- சவரிமுத்து உபாத்தியார்‌

Start Downloading Your Apps