சிந்தையுடன்‌ தெய்வாலயந்தனில்‌

சிந்தையுடன்‌ தெய்வாலயந்தனில்‌ சேர்வோம்‌,-திரி
யேகரின்‌ திருத்தாள்‌ போற்றியே களிகூர்வோம்‌.

1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்‌;-அவர்‌
செற்றலர்‌ இடித்துமே சிறந்தவாலயம்‌;-தமின்‌
மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம்‌ - சிந்‌

2. கர்த்தனைப்பிடித்தோன்‌ ஜீவ கற்றெய்வாலயம்‌;-எந்தக்‌
காலமும்‌ துதிமுழங்கும்‌ கான வாலயம்‌:-பரி
சுத்தமாய்த்தனையே காக்கும்‌ துங்க வாலயம்‌ - சிந்‌

3. திவ்யபக்தர்‌ கூட்டமே சிங்காரவாலயம்‌;-அது
தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்‌;-தீட்‌
டவ்வியம்‌ பகைவிலக்கும்‌ அன்பினாலயம்‌. - சிந்‌

4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்‌;-பக்தர்‌
மகிமை ஜோதிமய மாகுமாலயம்‌;-மெய்ஞ்‌
ஞானபாக்கியங்கள்‌ பெய்யும்‌ நாதராலாயம்‌. - சிந்‌

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps