என்ன சுகம் ஆஹா

என்ன சுகம் ஆஹா என்ன சுகம்
என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம்
பரமானந்த மோட்ச சுகானந்தம்
அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்

சரணங்கள்

1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம்
கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம்- என்ன சுகம்

2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம்
சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம்- என்ன சுகம்

3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம்
ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம்- என்ன சுகம்

4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம்
சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் - என்ன சுகம்

5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை
கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை - என்ன சுகம்

6. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள்
ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் - என்ன சுகம்

Start Downloading Your Apps