பாதம்‌ ஒன்றே வேண்டும்‌ இந்தப்

பாதம்‌ ஒன்றே வேண்டும்‌;-இந்தப்‌
பாரில்‌ எனக்கு மற்றேதும்‌ வேண்டாம்‌ - உன்‌

சரணங்கள்‌

1. நாதனே, துங்க மெய்‌-வேதனே, பொங்குநற்‌
காதலுடன்‌ துய்ய-தூதர்‌ தொழுஞ்‌ செய்ய - பாதம்‌

2. சீறும்‌ புயலினால்‌-வாரிதி பொங்கிடப்‌
பாரில்‌ நடந்தாற்போல்‌-நீர்மேல்‌ நடந்த உன்‌ - பாதம்‌

3. வீசும்‌ கமழ்‌ கொண்ட-வாசனைத்‌ தைலத்தை
ஆசையுடன்‌-மரி-பூசிப்‌ பணிந்த பொற்‌ - பாதம்‌

4. போக்கிடமற்ற எம்‌ ஆக்கினை யாவையும்‌,
நீக்கிடவே மரந்‌-தூக்கி நடந்த நற்‌ - பாதம்‌

5. நானிலத்தோர்‌ உயர்‌-வான்‌ நிலத்‌ தேற வல்‌
ஆணி துளைத்திடத்‌-தானே கொடுத்த உன்‌ - பாதம்‌

6. பாதம்‌ அடைந்தவர்க்‌-காதரவாய்ப்‌ பிர
சாதம்‌ அருள்‌ யேசு-நாதனே, என்றும்‌ உன்‌ - பாதம்‌

- சு.ச. ஏரேமியா

Start Downloading Your Apps