எழுந்தார்‌ இறைவன்‌ ஜெயமே

எழுந்தார்‌ இறைவன்‌,-ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார்‌ இறைவன்‌.

சரணங்கள்‌

1. விழுந்தவரைக்‌ கரையேற்றப்‌,-பாவத்‌
தழுந்து மனுக்குலத்தை மாற்ற,-விண்ணுக்‌
கெழுந்து நாம்‌ அவரையே போற்ற, - எழுந்தார்‌

2. செத்தவர்‌ மீண்டுமே பிழைக்க,-உயர்‌
நித்திய ஜீவனை அளிக்கத்‌,-தேவ
பக்தர்‌ யாவரும்‌ களிக்க. - எழுந்தார்‌

3. கருதிய காரியம்‌ வாய்க்கத்‌,-தேவ
சுருதி! மொழிகளெல்லாம்‌ காக்க,-நம்‌
இரு திறத்தாரையும்‌ சேர்க்க. - எழுந்தார்‌

4. சாவின்‌ பயங்கரத்தை ஒழிக்கக்‌,-கெட்ட
ஆவியின்‌ வல்லமையை அழிக்க,-இப்‌
பூவின்மீது சபை செழிக்க. - எழுந்தார்‌

5. ஏதுந்‌ தீவினை செய்யாத்‌ தூயன்‌,-எப்‌
போதுமே நன்மைபுரி நேயன்‌,-தப்‌
பாது காத்திடும்‌ நல்லாயன்‌. - எழுந்தார்‌

- அருள்திரு. சா. பரமானந்தம்‌

Start Downloading Your Apps