உந்தன் சொந்தமாக்கினீர்

1. உந்தன் சொந்தமாக்கினீர்,
அடியேனை நோக்குவீர்
பாதுகாரும், இயேசுவே
என்றும் தீங்கில்லாமலே.

2. நான் உம் சொந்தம் லோகத்தில்
மோட்ச யாத்திரை செய்கையில்
ஜீவன், சத்தியம், வழியும்,
நீரே ரட்சித்தாண்டிடும்.

3. நான் உம் சொந்தம் ரட்சியும்;
மட்டில்லாத பாக்கியமும்,
அருள் நாதா, நல்கினீர்;
இன்னமும் காப்பாற்றுவீர்.

4. நான் உம் சொந்தம்; நித்தமாய்
தாசனை நீர் சுகமாய்த்
தங்கச் செய்து மேய்ப்பரே,
காத்தும் மேய்த்தும் வாருமே.

5. நான் உம் சொந்தம் தேவரீர்
வழி காட்டிப் போஷிப்பீர்;
பாவம் நீங்கக் கழுவும்,
ஆயுள் முற்றும் நடத்தும்.

Start Downloading Your Apps