தீராத தாகத்தால்

1. தீராத தாகத்தால்
என் உள்ளம் தொய்ந்ததே,
ஆ, ஜீவ தண்ணீரால்
தேற்றும் நல் மீட்பரே.

2. விடாய்த்த பூமியில்
என் பசி ஆற்றுமே;
நீர் போஷிக்காவிடில்,
திக்கற்றுச் சாவேனே.

3. தெய்வீக போஜனம்
மெய் மன்னா தேவரீர்;
மண்ணோரின் அமிர்தம்
என் ஜீவ ஊற்று நீர்.

4. உம் தூய ரத்தத்தால்,
எம் பாவம் போக்கினீர்;
உம் திரு மாம்சத்தால்
ஆன்மாவைப் போஷிப்பீர்.

5. மா திவ்விய ஐக்கியத்தை
இதால் உண்டாக்குவீர்;
மேலான பாக்கியத்தை
ஏராளமாக்குவீர்.

6. இவ்வருள் பந்தியில்
பிரசன்னமாகுமே;
என் ஏழை நெஞ்சத்தில்
எப்போதும் தங்குமே.

Start Downloading Your Apps