எத்தனை நாவால்‌ துதிப்பேன்‌

எத்தனை நாவால்‌ துதிப்பேன்‌-எந்தன்‌
கர்த்தா உன்‌ கருணையைப்‌ பாடிப்‌ புகழ்ந்து.

நினைக்க நினைக்க எந்தன்‌ நெஞ்சமெல்லாம்‌ உருகும்‌,
நின்னைச்‌ சொல்‌ மாலையால்‌ சூட்டி மகிழும்‌. - எத்தனை

சரணங்கள்‌

1. நம்பினோரல்லோ அறிவார்‌-எந்தன்‌
தம்பிரானே உந்தன்‌ கம்பீர குணம்‌,
அம்பரா உன்‌ அன்பின்‌ அதிசய நடத்துதல்‌
சம்பூரண சவரட்சணை செல்வம்‌. - எத்தனை

2. பிரார்த்தனை கேட்கும்‌ பெம்மானே-இந்தப்‌
பேதை பலவீனம்‌ பாராதருள்‌ கோனே!
சரணென்றுன்‌ செம்பாத மலரடி சேர்ந்தோர்‌
தாவிப்‌ பிடித்துக்‌ கவலை தீர்த்தோனே! - எத்தனை

3. துணிவாய்‌ என்‌ நெஞ்சே தீவிரமாய்‌-மிகத்‌
தொழுது ஆண்டவன்‌ செயல்‌ நினைந்து,
எண்ணில்‌ அடங்காது இறைவனின்‌ கிருபை
விண்ணவன்‌ சேவையில்‌ வீரமாய்ச்‌ செல்லு. - எத்தனை

- சவரிராயன்‌ ஏசுதாசன்‌

Start Downloading Your Apps