அனுக்ரக வார்த்தையோடே இப்போ

அனுக்ரக வார்த்தையோடே-இப்போ-து
அடியாரை அனுப்புமையா!
மனமதில்‌ தயவுறும்‌ மகத்துவபரனே!
வந்தனம்‌ உமக்காமென்‌.

2. நின்திரு நாமமதில்‌-கேட்ட
நிர்மலமாம்‌ மொழிகள்‌
சந்ததம்‌ எமதகம்‌ மிக பலனளித்திடச்‌
சாமி நின்னருள்‌ புரிவாய்‌.

3, தோத்திரம்‌, புகழ்‌, மகிமை,-கீர்த்தி,
துதிகனம்‌, தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண்‌ ஆமென்‌!

- ௪.ஜெ. சிங்‌

Start Downloading Your Apps