இம்மானுவேலே வாரும் வாருமே

இம்மானுவேலே வாரும்‌, வாருமே,
மெய்‌ இஸ்ரவேலச்‌ சிறை மீளுமே;
மா தெய்வ மைந்தன்‌ தோன்றும்‌ வரைக்கும்‌
உண் ஜனம்‌ பாரில்‌ ஏங்கித்தவிக்கும்‌
மகிழ்‌! மகிழ்‌! சீயோனின்‌ சபையே,
இம்மானுவேலின்‌ நாள்‌ சமீபமே.

2. ஈசாயின்‌ வேர்த்துளிரே, வாருமே,
பிசாசின்‌ வல்ல கோஷ்டம்‌ நீக்குமே;
பாதாள ஆழம்‌ நின்று ரட்சியும்‌,
வெம்‌ சாவின்‌மேல்‌ பேர்‌ வெற்றி அளியும்‌.

3. அருணோதயமே, ஆ! வாருமே,
வந்தெங்கன்‌ நெஞ்சை ஆற்றித்‌ தேற்றுமே;
மந்தார வின்‌ மேகம்‌ நீக்கிடும்‌,
இருண்ட சாவின்‌ நிழல்‌ ஓட்டிடும்‌.

4. தாவீதின்‌: திறவுகோலே , வாருமே,
விண்‌ வாசலைத்‌ திறந்து தாருமே!
ஒடுக்கமாம்‌ நல்‌ வழி காத்திடும்‌,
விசாலமாம்‌ துர்ப்பாதை தூர்த்திடும்‌.

5. மா வல்ல ஆண்டவா, வந்தருளும்‌;
முற்காலம்‌ சீனாய்‌ மலைமீதிலும்‌
எக்காளம்‌ மின்னலோடு தேவர்‌
பிரமாணம்‌ இஸ்ரவேலுக்களித்தீர்‌.

Start Downloading Your Apps