ஐயரே நீர் தங்கும்

1. ஐயரே, நீர் தங்கும்! என்னிடம்
ஐயரே, நீர் தங்கும் - இப்போ
அந்தி நேரம் பொழுதஸ்தமித்தாச்சே
ஐயா, நீர் இரங்கும்.

2. பகல் முழுவதும் காத்தீர் சென்ற
பகல் முழுவதும் காத்தீர் - தோத்திரம்
பரமனே, இந்த இரவிலும் வாரும்
பாவியை நீர் காரும்

3. தங்கா தொருபொருளும் என்னிடம்
தங்காதொரு பொருளும் - இயேசு
தற்பரனே நீர் ஒருவரே யென்னில்
தங்கித் தயை புரியும்.

4. உயிரே துமையன்றிப் பாவிக்
குயிரே துமையன்றி? - என்றன்
உடல் உயிர் உம்மால் உய்கிறதையா,
உத்தமனே, தங்கும்.

4. எனக்கு நீர் காவல் என்றும்
எனக்கு நீர் காவல் - எந்தன்
இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
எல்லாவர்க்குங் காவல்.

Start Downloading Your Apps