நாவில் வந்திருப்பாயே நசரேயா

நாவில் வந்திருப்பாயே நசரேயா
நாவில் வந்திருப்பாயே

1. தேவ செங்கோலா திருமனுவேலா
தாவீதரசு பாலா நசரேயா - நாவில்

2. பாவியின் நேசா பரம சந்தோசா
ஆவியை அருளீசா நசரேயா - நாவில்

3. உள்ளங்கள் உருக உன் சபை பெருக
வள்ளலே தயை தருக நசரேயா- நாவில்

4. நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம்
கல்மனம் உருகும்படி நசரேயா- நாவில்

5. ஆவியால் நிறைந்து அமலனை பாட
ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா- நாவில்

Start Downloading Your Apps