காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார், இன்னும் இனிமேல் காத்திடுவார்
கலங்காதே மனமே - காத்திடுவார்

சரணங்கள்

1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார், அவர் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
என்ணிப்பார், என்ணிப்பார், எண்ணிப்பார்
ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் - காப்பார்

2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ - காப்பார்

3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
இரக்கமா யுனக்களிப்பவரும் - காப்பார்

4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே- காப்பார்

5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
பரிசுத்தத்தில் லங்கரித்தார்- காப்பார்

Start Downloading Your Apps