உத்தமக் கிறிஸ்தவர் யாரோ

உத்தமக் கிறிஸ்தவர் யாரோ
நித்தமும் கிறிஸ்துவைப் பின்பற்றுவோரே (2)
உத்தமக் கிறிஸ்தவரே

சரணங்கள்

1. அன்பினால் எதையும் வென்றிடுவாயா
மன்னிக்கப் பிறரை முந்திடுவார்
உண்மையே என்றும் பேசுவார்
இன்முகமே தினம் காட்டிடுவார்- உத்தம

2. ஆலயம் ஒழுங்காய்ச் சென்றிடுவார்
உள்ளமே ஆலயம் ஆக்கிடுவார்
வேதத்தை ஆவலாய்ப் படித்திடுவார்
பாதைக்குத் தீபமாய்க் கொண்டிடுவார்- உத்தம

3. செய் தொழில் ஊக்கமாய் செய்திடுவார்
பொய் வழி சென்றிட மறுத்திடுவார்
அரசியலில் அவர் இறங்கிடுவார்
அநியாய வழிதனை விடுத்திடுவார் - உத்தம

4. திருச்சபை தேர்தலில் பங்கு கொள்வார்
பரிசுத்தத் தலைவரைத் தெரிந்தெடுப்பார்
பொறுப்புகள் ஏற்றுமே பணிபுரிவார்
பொறுமையின் சின்னமாய் விளங்கிடுவார்- உத்தம

5. வாழ்க்கையில் கிறிஸ்துவைக் காட்டிடுவார்
சொல்லோடு நின்றிட மறுத்திடுவார்
சொல் செயல் சிந்தனை மூன்றிலுமே
பிறர்க்கென வாழ்ந்திட முயன்றிடுவார் - உத்தம

Start Downloading Your Apps