எழுந்தருளும்‌ ஏசு சுவாமி

எழுந்தருளும்‌ ஏசு சுவாமி

விழுந்‌ தலகை அழிந்தொழியத்‌
தொழுஞ்‌ சுரரும்‌ வரல்‌ ஆச்சே - எழுந்‌

சரணங்கள்‌

1. இஸ்திரீகள்‌ கந்தவர்க்கம்‌ எடுத்‌ தேந்தி, பிரேதலங்கா
ரத்தின முறை நாடி, இதோ! ஆசரிக்க வந்தாரே. - எழுந்‌

2. மகதலா ஊர்‌ மரியாள்‌ மகிழ்ந்து தரிசித்‌ தேற்ற,
அகமகிழ்ந்தப்‌ போஸ்தலர்கள்‌ அதிசயித்துப்‌ போற்ற - எழுந்‌

3. பாடுபட்டு மரித்தடக்கப்‌ பட்ட தினம்‌ மூன்றாச்சே,
ஏடுமுட்ட வரைந்த தெல்லாம்‌ நிறைவேறி முடித்தாச்சே - எழுந்‌

4. முத்திரையும்‌ காவல்களும்‌ மூடிய கல்லதும்‌ நீங்கி,
சத்துருக்கள்‌ நடுநடுங்கித்‌ தயங்கி மனங்‌ கலங்க. - எழுந்‌

5. வேதாளம்‌ நடுங்கி விழ, விண்ணோர்‌ திரண்டு தொழ,
பாதாளம்‌ இடிந்து விழப்‌, பராபரனே, எழுந்தருளும்‌. - எழுந்‌

6. விஸ்தார உலகமதில்‌, மெய்யான திருச்சபையில்‌,
தோத்ர சங்கீர்த்தனம்‌ எந்நாளும்‌ உண்டாக. - எழுந்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps