அல்லேலூயா ஜெயமே அமலன்

அல்லேலுயா ஜெயமே அமலன்‌ எழுந்தார்‌ அதிசயமே

பொல்லாப்‌ பேய்‌ நடுங்கிவிழப்‌
பொற்பரனின்‌ சேயர்‌ மகிழ. - அல்‌

சரணங்கள்‌

1. பாவம்‌ பேயோடு மரணம்‌,
பாழன்‌ பேயினது அரணம்‌,
சீவபரனால்‌ திரணம்‌,
திடமாயடைவோம்‌ அவர்‌ சரணம்‌. - அல்‌

2. வலுசிங்கம்‌ சிறையாச்சு,
மாற்றானின்‌ வல்லமை போச்சு,
அலகையுளதோ பேச்சு
அதுவிடலாமோ இனி முச்சு. - அல்‌

3. திருநாதர்‌ பேயிருபேர்‌
செய்தார்‌ கொடியதா மொருபோர்‌
அருணாதர்‌ தாம்‌ ஜெயம்‌ நேர்‌
அடைந்தார்‌ ஓ சபையே களிகூர்‌. - அல்‌

- அருள்திரு . ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps