இந்தக்‌ குழந்தையை நீர்‌ ஏற்றுக்

இந்தக்‌ குழந்தையை நீர்‌ ஏற்றுக்கொள்ளும்‌, கர்த்தாவே.
உந்தம்‌ ஞானஸ்நானத்தால்‌ உமக்குப்‌ பிள்ளையாய்‌ வந்த -இந்த

1. பிள்ளைகள்‌ எனக்‌ கதிகப்‌ பிரியம்‌, வரலாம்‌, என்று
உள்ளமுருகிச்‌ சொன்ன உத்தம சத்தியனே. -இந்த

2. பாலரைக்‌ கையில்‌ ஏந்தி பண்பாய்‌ ஆசீர்வதித்த
சீலமாயின்றும்‌ வந்தாசீர்வாதம்‌ செய்யும்‌, ஐயா. -இந்த

3. உமக்‌ கூழியஞ்‌ செய்யவும்‌ உம்மைச்‌ சிநேகிக்கவும்‌,
உமது ஆவியைத்‌ தந்து உம்முட மந்தை சேர்த்து. -இந்த

4. உலகமும்‌ பேய்ப்‌ பசாசும்‌ ஒன்றும்‌ தீது செய்யாமல்‌,
நலமாய்‌ இதைக்‌ காத்தாளும்‌, நன்மைப்‌ பராபரனே! -இந்த

5. விசுவாசத்‌ தோடிதுந்தன்‌ மேய்ப்புக்கும்‌ உள்ளடங்கிப்‌,
பசிய மரம்போல்‌ தெய்வ பத்தியிலே வளர. -இந்த

- அருள்திரு. பாக்கியநாதன்‌ தாவீது

Start Downloading Your Apps