தோத்திரம்‌ புகழ்‌ கீர்த்தனம்‌

தோத்திரம்‌, புகழ்‌ கீர்த்தனம்‌,
ஜெய சோபனம்‌ உமக்கையா -துதி
சொல்லவும்‌ தீதை வெல்லவும்‌
க்ருபை சூட்டுவீர்‌, கிறிஸ்தையா!

கோத்திரவழி சிறந்த யூத நல்‌
கொற்றவா, தேவபாலா,
மனுவேலா, மறைநூலா,
செங்கோலனு கூலா. - தோத்

சரணங்கள்‌

1. எந்தனை மீட்க நீர்‌ இந்த உலகினில்‌ வந்து பிறந்தீர்‌;
நன்‌ மனுவாய்‌- மறை
ஏற்றித்‌ தினம்‌ எனை ஆற்றி நன்‌ மொழியால்‌ தேற்றினீர்‌;
முற்றிலும்‌ தனுவாய்‌
நிந்தை அடைந்து மெய்ச்‌ சொந்த உதிரத்தைச்‌ சிந்தினீர்‌;
எத்தனை பரிவாய்‌- தேவ
நீதியும்‌ விளங்கச்‌ செய்து பவமனு சாதிக்கிரங்கி நற்குருவாய்‌
நின்றீரே, நடுவராய்‌ நின்றீரே; தீதை எல்லாம்‌
கொன்றீரே, பசாசையும்‌ வென்றீரே,
ஜெயம்‌ கொண்டீரே நித்ய. - தோத்‌

2. சுத்த சுவிசேஷ சத்தியமொழியை வித்தரிக்க வரந்தாரும்‌;-நேய
சூரிய கிரண வீரியத்தால்‌ எனக்‌ காரோக்கியம்‌ அருள்கூரும்‌;
நித்தம்‌ எனைத்‌ தேவ பத்தியில்‌ நடத்திச்‌ சித்தம்‌ இரங்கிக்‌
கண்பாரும்‌;- கரம்‌
நீட்டிக்‌ கிருபையைச்‌ சூட்டிக்‌ கவலையை
ஓட்டி என்‌ துயரைத்‌ தீரும்‌;
நில்லும்‌, ஐயா, என்‌ பக்கத்தில்‌ நில்லும்‌,
ஐயா; தினம்‌ நலம்‌
சொல்லும்‌, ஐயா; தீயோன்‌ தனை வெல்லும்‌,
ஐயா; தீதைக்‌ கொல்லும்‌, ஐயா, துய்யா! - தோத்‌

3. நித்திய ஜீவனைப்‌ பெற்றும்மோடிருக்கச்‌
சுத்தி கரித்தென்னை ஆளும்‌;-பவ
நிந்தையோ டென்‌ சுய கந்தை! அகற்றி மெய்‌ விந்தைக்‌
கிருபையால்‌ சூழும்‌;
சத்திய வசனவித்தால்‌ எனை ஜெனிப்பித்‌ தென்‌ மனதினில்‌
வாழும்‌; - பதஞ்‌
சாற்றித்‌ தினம்‌ உமைப்‌ போற்றிப்‌
பணிந்திடத்‌ தேற்றி எனை அரசாளும்‌;
சற்குருவே, கிறிஸ்தெனும்‌ சற்குருவே, ஜீவன்‌ உள
சொற்குருவே, நித்தியானந்த நற்குருவே,
பரப்‌ பொற்குருவே, தேவே. - தோத்‌

- மரியான்‌ உபதேகியார்‌

Start Downloading Your Apps