மங்களம்! ஜெயமங்களம்

மங்களம்! ஜெயமங்களம்
மாசில்லா திரியேகர்க்கு!

சங்கையின் ராஜர்க்கு
எங்குமாபுகழ் நேசர்க்கு - மங்களம்

1. அந்தம் ஆதி யில்லாதவர்,
விந்தை யுலகம் செய்தவர்,
முந்த நமை நேசித்தவர்,
மூவுலகுக்கும் ஆண்டவர்
சந்ததம் வாழ்பவர்,
எந்தையாம் பிதாவுக்கு. -மங்களம்

2. வான லோகமே விட்டு,
ஈனப்பாவியையிட்டு
தானமாயுயிர் விட்டு
தீன நரரைத் தான் மீட்டு,
வாழும் மணவா ளர்க்கு
நன்மைசெய் மனுவேலர்க்கு. -மங்களம்

3. சுத்த இதயமே தந்து,
பக்தர் மனதிலே வந்து
அத்த னாலயமா யீந்து
நித்தம் துதிபெற நின்று,
சத்தியம் போதிக்கும்
சுவாமி பரிசுத்தாவிக்கும். -மங்களம்

Start Downloading Your Apps