பாவி இன்றே திரும்பாயோ

பாவி, இன்றே திரும்பாயோ?-நேச
ஆவியின்‌ சத்தம்‌ கேளாயோ?

மேவி தயை நிரம்பி, ஏவி உனை விரும்பிக்‌
கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி. -பாவி

சரணங்கள்‌

1. பாவம்‌ தொடர்ந்து செல்லுமே;-பாவ
சாபம்‌ அடர்ந்து கொல்லுமே;-உனின்ப
லாபம்‌ எல்லாமே சாபம்‌; காலமிதுவே காலம்‌;
தாபம்‌ உளவுன்‌ யேசு மா பரிதாபம்‌ கண்டு. -பாவி

2. எத்தனை போதனை பெற்றாய்‌,-ஐயையோ!
சுத்தமாய்ச்‌ சாதனை அற்றாய்‌,-என்றாலும்‌
அத்தனை பாவத்தையும்‌ முற்றுமாக வெறுத்து,
அத்தனே, தத்தம்‌ செய்தேன்‌, நித்தமும்‌ காவுமென்று. -பாவி

3. கல்வாரியில்‌ தொங்கினோர்‌ யார்‌?-உனக்‌
கல்லோ நேசர்‌ ஏங்கினோர்‌ பார்‌!-இன்னும்‌
பொல்லா மனதுடனே கல்போல்‌ கடினமாகிச்‌
செல்வோரையும்‌ நிந்தித்து எல்லாக்‌ கேட்டுக்குள்ளான. -பாவி

4. நிலை யின்றலை கின்றோரே,-ரத்த
விலை மதியாமல்‌ சென்றோரே,-போதும்‌;
மலையாமல்‌ யேசுவிடம்‌ தொலையாத கவலை சொல்லி,
உலையா, நம்பிக்கை வைத்து நிலையான ரட்சைபெற. -பாவி

- ஐ.த. சாமுவேல்‌

Start Downloading Your Apps