Total Matches: 31082

லேவியராகமம் 22:6

சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.

லேவியராகமம் 22:7

சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.

லேவியராகமம் 22:8

தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.

லேவியராகமம் 22:9

ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

லேவியராகமம் 22:10

அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

லேவியராகமம் 22:11

ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம்.

லேவியராகமம் 22:12

ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

லேவியராகமம் 22:13

விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோல திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம்; அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.

லேவியராகமம் 22:14

ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டி பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.

லேவியராகமம் 22:15

அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும்,

லேவியராகமம் 22:16

அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 22:17

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவியராகமம் 22:18

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,

லேவியராகமம் 22:19

அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.

லேவியராகமம் 22:20

பழுதுள்ள ஒன்றையும் செலுத்தவேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.

லேவியராகமம் 22:21

ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.

லேவியராகமம் 22:22

குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.

லேவியராகமம் 22:23

நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.

லேவியராகமம் 22:24

விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.

லேவியராகமம் 22:25

அந்நிய புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.

லேவியராகமம் 22:26

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவியராகமம் 22:27

ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.

லேவியராகமம் 22:28

பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.

லேவியராகமம் 22:29

கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.

லேவியராகமம் 22:30

அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.

Start Downloading Your Apps