சுவிசேஷத்தைக் கேட்பீரே

சுவிசேஷத்தைக் கேட்பீரே
சுதன் இயேசுவை ஏற்பீரே

சரணங்கள்

1. நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே
சிலுவையைச் சுமந்தாரே
ஜீவனையும் ஈந்தாரே- சுவி

2. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே
அவராலே யன்றி நித்திய
ஜீவனில்லை என்றாரே- சுவி

3. வருத்தப்பட்டுப் பாரமே சுமப்பவர்கள் யாவரும்
வருவீரே என்னிடமே
தருவேன் இளைப்பாருதலே- சுவி

4. முள் முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே
உள்ளத்தில் விசுவாசித்தால் வல்ல
இரட்சிப்பைப் பெறுவாய்- சுவி

5. இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது
கவலையற்றிருப்போரே
தண்டனைக்குத் தப்புவீரோ?- சுவி

Start Downloading Your Apps