அப்பா அருட்கடலே வரம்

அப்பா, அருட்கடலே, வரம்‌
துப்பாய்‌' இவர்க்கருள்வாய்‌!
அனுபல்லவி
செப்பரிதாகிய மெய்ப்பொருளை எங்கும்‌
சென்றறிவித்திட நிறைவாய்‌. - அப்பா

சரணங்கள்‌
1. பண்டு புறாவுருகொண்டு இறங்கிய
பான்மை இவர்‌ சிரமீதே,-திருத்‌
தொண்டு செய்யும்படி வல்லாவியால்‌ முடி
சூட்ட இரங்கும்‌ இப்போதே. - அப்பா

2. நன்னயமாகவே பன்னிரு வேதியர்‌
நாவில்‌ எழுந்துரை யாடிப்‌,-பேயின்‌
சன்னதம்‌” ஓய்ந்திடப்‌ பண்ணியவாறிவர்‌
தம்மிலும்‌ வந்தசை வாடி. - அப்பா

3. இன்பாய்‌ உலகை இமைக்குள்‌ அமைத்தவர்‌
ஏவைக்‌ குலங்கள்‌ ஈடேறப்‌,-பெருந்‌
துன்பாய்‌ இறந்த பேரன்பைத்‌ தெளிவுறச்‌
சொல்லு முந்நூலினில்‌ தேற. - அப்பா

4. தேகமும்‌ ஆவியும்‌ ஜீவியம்‌ யாவையும்‌
தீயவை அப்புறம்‌ ஏகத்‌,-திரி
யேகருக்‌ கர்ப்பிகமாக' ஒப்பிக்கும்‌ நல்‌
எண்ணம்‌ இவர்க்குள்‌ உண்டாக. - அப்பா

5. முந்து நடுவு முடிவுமிலா ஒரு
மூவரில்‌ அக்கினிக்‌ கொழுந்தே,-தேவ
சிந்தை இவரில்‌ சிறந்தொளி லீசிடச்‌
செய்வதற்‌ கிங்கனம்‌ எழுந்தே. - அப்பா

- எ.ஐ. குளோறியா

Start Downloading Your Apps