அஞ்சாதிரு என் நெஞ்சமே

1.அஞ்சாதிரு, என் நெஞ்சமே,
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண்பார்ப்போம் என்கிறார்;
இக்கட்டில் திகையாதிரு,
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்.

2.தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய்
கஸ்தி அடைந்தும், பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.

3.கருத்தாய் தெய்வ தயவை
எப்போதும் நம்பும் பிள்ளையைச்
சகாயர் மறவார்;
மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார்.

4.என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;
பேய், லோகம், துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே;
இம்மானுவேல் உன் கன்மலை,
அவர் மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே..

Start Downloading Your Apps