இயேசு நாதா காக்கிறீர்

1. இயேசு நாதா! காக்கிறீர்,
இளைப்பாறச் செய்கிறீர்,
மோசம் நேரிடாமலும்,
பாதம் இடறாமலும்,
என்னைத் தாங்கி நிற்கிறீர்;
நேச நாதா! காக்கிறீர்.

2. வாரிபோன்ற லோகத்தில்
யாத்திரை செய்து போகையில்,
சூறைக் காற்று மோதினும்,
ஆழி கோஷ்டமாயினும்,
அமைதல் உண்டாக்குவீர்;
நேச நாதா! காக்கிறீர்!

3. சற்றுத் தூரம் செல்லவே,
மோட்ச கரை தோன்றுமே!
துன்பம் நீங்கி வாழுவேன்;
இன்பம் பெற்று போற்றுவேன்;
அது மட்டும் தாங்குவீர்;
நேச நாதா! காக்கிறீர்.

Start Downloading Your Apps