மாட்சி மிகும் மோட்ச நகர்

1. மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் - அந்த
மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்

2. பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே - அங்கு
பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே

3. முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது
முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது

4. ஜீவநதி பாயுகின்ற பட்டணமது - நிதம்
சித்திரமுடனிலங்கும் பட்டணமது

5. நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது - நமது
நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது

6. சாவு துக்கமேயில்லாத பட்டணமது - நிதம்
சங்கீதமுடனிலங்கும் பட்டணமது

Start Downloading Your Apps