விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே (2)

1. கொடும் வறுமையின் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர் - இன்று
இன்று உன் பசி ஆற்றிடாரோ - கலங்காதே

2. பெரும் நோய்தனி் கலங்கிடாதே
பாசத்தால் உன்னை சோதிப்பாரே
திமிர் வாதத்தால் அசைவற்றவன் - தேவ
தயவினால் நடக்கலையோ- கலங்காதே

3. தந்தை தாய் உன்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் உன்னை - சொந்த
கரங்களால் அணைத்துக் கொள்வார்- கலங்காதே

Start Downloading Your Apps