எங்கும்‌ புகழ்‌ யேசு ராசனுக்கே

எங்கும்‌ புகழ்‌ யேசு ராசனுக்கே
எழில்‌ மாட்சிமை வளர்‌ வாலிபரே!

உங்களையல்லவோ உண்மை வேதங்‌ காக்கும்‌,
உயர்வீரரெனப்‌ பக்தர்‌ ஓதுகிறார்‌. - எங்கும்‌

சரணங்கள்‌

1. ஆயிரத்‌ தொருவர்‌ ஆவிரல்லோ நீரும்‌
அதை அறிந்து துதி செய்குவீர்‌;
தாயினும்‌ மடங்கு சதம்‌ அன்புடைய
சாமி யேசுவிக்கிதயம்‌ தந்திடுவீர்‌. - எங்கும்‌

2. கல்வி கற்றவர்கள்‌ கல்வி கல்லாதோர்க்குக்‌
கடன்பட்டவர்கள்‌ கண்திறக்கவே;
பல்வழி அலையும்‌ பாதைதப்பினோரைப்‌
பரிந்து திருப்ப நிதம்‌ பார்த்திடுவீர்‌. - எங்கும்‌

3. தாழ்மை சற்குணமும்‌ தயை காருண்யமும்‌
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும்‌ பாவச்‌ செய்கையாவும்‌
பறந்தோடப்‌ பார்ப்பதுங்கள்‌ பாரமன்றோ? - எங்கும்‌

4. சுத்த சுவிசேஷம்‌ துரிதமாய்ச்‌ செல்ல
தூதர்‌ நீங்களே தூயன்வீரரே;
கர்த்தரின்‌ பாதத்தில்‌ காலைமாலை தங்கிக்‌
கருணை நிறை வசனம்‌ கற்றிடுவீர்‌. - எங்கும்‌

- ல. பொன்னுசுவாமி

Start Downloading Your Apps