ஏன்‌ இந்தப்‌ பாடுதான்‌ சுவாமி

ஏன்‌ இந்தப்‌ பாடுதான்‌!-சுவாமி
என்ன தருவேன்‌ இதற்‌ கீடுநான்‌?

ஆனந்த நேமியே - எனை ஆளவந்த குரு சுவாமியே - ஏன்‌

சரணங்கள்‌

1. கெத்செமனே யிடம்‌ ஏகவும்‌,-அதின்‌
கெழு மலர்க்‌ காவிடை போகவும்‌,
அச்சயனே, மனம்‌ நோகவும்‌,-சொல்‌
அளவில்லாத்‌ துயரமாகவும்‌, - ஏன்‌

2. முழுந்தாள்‌ படியிட்டுத்‌ தாழவும்‌,-மும்‌
முறை முகம்‌ தரைபட வீழவும்‌,
மழுங்கத்‌ துயர்‌ உமைச்‌ சூழவும்‌,-கொடு
மரண வாதையினில்‌ மூழ்கவும்‌, - ஏன்‌

3. அப்பா, பிதாவே, என்றழைக்கவும்‌,-துயர்‌
அகலச்‌ செய்யும்‌, என்றுரைக்கவும்‌,
செப்பும்‌ உன்‌ சித்தம்‌ என்று சாற்றவும்‌,-ஒரு
தேவதூதன்‌ வந்து தேற்றவும்‌, - ஏன்‌

4. ஆத்துமத்‌ துயர்‌ மிக நீடவும்‌,-குழம்‌
பாக உதிர வேர்வை ஓடவும்‌,
சாத்திர மொழிகள்‌ ஓத்தாடவும்‌,-உந்தன்‌
தாசரும்‌ பதந்தனை நாடவும்‌. - ஏன்‌

- ஏசுதாசன்‌ அண்ணாவியார்‌

Start Downloading Your Apps