அலை அலையாய் அலையினூடே

அலை அலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிட வா. (2)

சரணங்கள்

1. அலைகடலில் மீன் பிடிப்போனே - நீ
வலை கிழிய மீன் பிடிக்க வா
கலைகளெல்லாம் கைவிட்டதோ - உன்
வலையை வலப்புறமே வீச வா - அலை

2. அலைகடலைக் கடந்து சென்றோனே - நீ
வலைகளிலே சிக்கிவிட்டாயோ
மலைதனிலே சிலுவையண்டை பார்
விலைமதியா விடுதலையுண்டே - அலை

3. பல வழிகள் பார்த்து நிற்கும் நீ
பார் மலைகளிலே மாளும் மாந்தரை
அலை அலையாய் மாந்தர் செல்கின்றார் - உன்
வலையுடனே வேகமாக வா - அலை

4. அலைகளினால் அமிழும் நண்பனே - நீ
அலைகளின்மேல் நடந்த நாதராம்
தலைவன் இயேசு கரம் பிடித்திட்டால்
அலைகளின்மேல் அழைத்துச் செல்லுவார் - அலை

- Robert Sam Raj

Start Downloading Your Apps