பிதா சுதன் ஆவியே

1. பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே,
கேளும் நெஞ்சின் வேண்டலை,
தாரும் சமாதானத்தை;
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்.

2. உந்தன் அடியாரை நீர்
ஒரே மந்தையாக்குவீர்;
ஒரே ஆவியும் உண்டே
விசுவாசமும் ஒன்றே;
ஒன்றே எங்கள் நம்பிக்கை;
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டு கொள்ளும் கர்த்தரே,
ஏக சிந்தை தாருமே.

3. மீட்டுக்கொண்ட ஆண்டவா,
அன்னியோன்னிய காரணா,
ஜீவ நேசா, தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்;
பிதா சுதன் ஆவியே,
ஏகரான ஸ்வாமியே
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும்.

Start Downloading Your Apps