எந்தன் ஆத்ம நேசர் எங்கே!

எந்தன் ஆத்ம நேசர் எங்கே!

அனுபல்லவி

அவர் எங்கே - எவர் எங்கே
அவர் எங்கே எங்கே எங்கே - எந்தன்

சரணங்கள்

1. நகரத்தின் தெரு வீதி சென்று
நான் நலமுடன் தேடினேன் நின்று
ஐயோ தேடியும் காணாமல் நின்று
முகம் வாடி மயங்குகிறேன் நின்று- எந்தன்

2. காட்டு மரங்களில் தானும்
நல்ல கிச்சிலி மரம் போல தோணும்
நல்ல குமாரர்க்குள்ளே இவர் தானும்
குடியிருப்பது போலவே தோணும்- எந்தன்

3. பதினாயிரம் பேரில் சிறந்தோர்
அதி வெண்மை சிவப்பு நிறமானோர்
தலை பொன் மயமாய் விளங்கிடுமே
மயிர் சுருள் சுருளாய் இருப்பவரே- எந்தன்

4. லீபனோன் போலவர் ரூபம்
மிக மதுரமவர் வாயின் வசனம்
லீலிப் புஷ்பங்கள் போன்றவருதட்டில்
நின்று வாசனை வெள்ளைப்போளம் வடியும் - எந்தன்

5. இடது கை என் தலை கீழ் வைத்து
அவர் வலது கையாலரவணைத்து
என்னை மனதாய் அணைத்துக் கொள்வதாலே
நான் சோகமடையேன் நேசத்தாலே - எந்தன்

Start Downloading Your Apps