வாரா வினை வந்தாலும்‌ சோராதே

வாரா வினை வந்தாலும்‌ சோராதே மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.

சரணங்கள்‌

1. சூரன்‌ சதித்துன்‌ மீது வலை வீசினாலும்‌,
சோராதே, ஏசுபரன்‌ தஞ்சம்‌ விடாதே. - வாரா

2. உலகம்‌ எதிர்த்துனக்கு மலைவு' செய்தாலும்‌,
உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே. - வாரா

3. பெற்ற பிதாப்போல்‌ உன்‌ குற்றம்‌ எண்ணாரே;
பிள்ளை ஆகில்‌ அவர்‌ தள்ளிவிடாரே. - வாரா

4. தன்‌ உயிர்‌ ஈந்திட்ட உன்‌ யேசுநாதர்‌
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர்‌ மீதே. - வாரா

5. மரணம்‌ உறுகின்ற தருணம்‌ வந்தாலும்‌,
மருள விழாதே, நல்‌ அருளை விடாதே. - வாரா

6. வையகமே உனக்குய்ய ஓர்‌ நிலையோ?
வானவனை முற்றும்‌ தான்‌ அடைவாயே! - வாரா

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps