இயேசுவின் கரங்கள் அன்பின்

இயேசுவின் கரங்கள் அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் அல்லேலூயா (4)

1. கானாவூரில் கனிரசம் தந்ததும்
குருடனின் கண்களை திறந்ததும்
இயேசுவின் கரங்கள் - என் நேசரின் கரங்கள்
அல்லேலூயா (2) - இயேசுவின்

2. பேதுருவை கடலினில் தூக்கியதும்
பாடை தொட்டு வாலிபனை உயிர்ப்பித்ததும்
இயேசுவின் கரங்கள் - என் நேசரின் கரங்கள்
அல்லேலூயா (2) - இயேசுவின்

3. தோமாவின் சந்தேகம் தீர்த்ததும்
தவித்திட்ட எந்தனைத் தேற்றியதும்
இயேசுவின் கரங்கள் - என் நேசரின் கரங்கள்
அல்லேலூயா (2) - இயேசுவின்

4. பார்தலப் பாவங்கள் போக்கிடவே
பாரமாம் சிலுவையை சுமந்திடவே
ஆணி அறைந்திடவே - மிக துடி துடித்த கரங்கள்
அல்லேலூயா (2) - இயேசுவின்

Start Downloading Your Apps