ஆயிரக்கணக்கான வருடங்களாய்‌

ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ராயேல் சனங்களை ஆளவரும் - எம்
இயேசு இரட்சகரே எழுந்தருள்வீர்

ஓசான்னா தாவீதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. மாமரி வயிற்றினில் பிறந்தவரே
மாமுனி சூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிட குலத்தினில் உதித்தவரே எம்
மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசான்னா

2. கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதைக்
கந்த ரசமாக்கிப் பெயரடைந்தீர்

3. குருடர் அநேகர் ஒளி பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாருமே நீர்

4. யூதேயா நாட்டினில் புகழ் பெற்றீர் - எம்
யூத ராஜனாய் முடிபெற்றீர்
எருசலேம் நகர்தனிற் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசரே அரசாள்வீர்

5. பாவிகளைத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் பொறுக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே

6. கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே

7. உலகமே நுமது அரிய வேலை - எம்
உயிருமே நுமது மா புதுமை
உலகத்தை யாண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே

Start Downloading Your Apps